News Update :
Home » , » மலையக நாடகப்போட்டி

மலையக நாடகப்போட்டி

Penulis : Unknown on ஞாயிறு, 2 மார்ச், 2014 | ஞாயிறு, மார்ச் 02, 2014

மலையகத்தின் கலை, கலாச்சார விழுமியங்களை மேம்படுத்துவதனை நோக்காகக்கொண்டு, இந்நாடகப்போட்டிகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.

புதியமலையகம் என்னும் தலைப்பையே கருப்பொருளாகக் கொண்டு, மலையக மக்களின் சமகால பிரச்சினைகளை உள்ளடக்கியதாக நாடகங்கள் அமைய வேண்டும்.
விதிகள்
  • நடிகர்களின் எண்ணிக்கை 10 க்கும் மேற்படலாகாது.
  • தனிப்பட்ட எவரையும் தாக்குவதாக கதைகள் அமையலாகாது.
  • நாடகத்தின் பிரதி ஒன்று அனுப்பிவைக்கப்பட வேண்டும்.
  • மேடை ஒழுங்கமைப்பிற்கு 10 நிமிடங்களும், நாடகத்திற்கு 20 நிமிடங்களுமாக மொத்தம் 30 நிமிடங்கள் வழங்கப்படும்.
  • இதற்கு முன் மேடையேற்றப்பட்டதாக இருக்ககூடாது.
  • நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது
பரிசு விபரங்கள்
    தெரிவுசெய்யப்படும் முதல் மூன்று இடங்களைப்பெற்ற நாடகங்களுக்கு பணப்பரிசில்கள்,சான்றிதழ்கள் என்பன வழங்கப்படும்.

    சிறந்த நடிகர், நடிகை, துணைநடிகை,துணைநடிகர்,இயக்குநர், மேடை ஒழுங்கமைப்பு,கதாசிரியர் என்றபிரிவுகளிலும் ,பரிசில்கள்,சான்றிதழ்கள் என்பன வழங்கப்படும்.

    முதல் இடத்தைப்பெற்ற நாடகத்திற்கு கேடயம் பரிசாக வழங்கப்படுவதுடன், பிரபல ஊடகமொன்றில் நாடகத்தை ஒளிபரப்பச்சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

    நாடகம் வந்து சேர வேண்டிய இறுதி திகதி  30.06.2013


    நாடகம் அனுப்பவேண்டிய  ஈமெயில் ; puthiyamalaiyakampmk@gmail.com
    Share this article :

    கருத்துரையிடுக