News Update :
Hot News »
Bagikan kepada teman!

மலையக மக்களும் ஜனாதிபதி தேர்தலும். II

Penulis : Unknown on புதன், 24 டிசம்பர், 2014 | புதன், டிசம்பர் 24, 2014

புதன், 24 டிசம்பர், 2014

இன்று ஜனாதிபதி தேர்தல் என்றுமில்லாத அளவுக்கு சூடுபிடித்துள்ளது. ஆளும், எதிர்கட்சிகளிலிருந்து கட்சி தாவல்களுடன் ஆரம்பித்த தேர்தல்களம் இன்று போர்களமாக காணப்படுகின்றது.வழமையான ஜனாதிபதி தேர்தல்கள் போல் அல்லாமல் பல்வேறு சர்சைகளுக்கு உட்பட்டதால் ஜனாதிபதி தேர்தல் விமர்சனங்களுக்குட்பட்டதாக உள்ளதை காணக்கூடியதாகவிருக்கிறது. 1977 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் 4/5 பெரும்பான்மையைப் பெற்று ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிபீடம் ஏறியது.1978 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவினால் கொண்டுவந்த அரசியல்யாப்பின் பிரகாரம் ஜனாதிபதி ஆட்சி முறையும் விகிதாசாரத் தேர்தல் முறையும் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டன. இவ்வாட்சி முறையின் கீழ் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினர்களும் வெவ்வேறு தேர்தல்களின் மூலம் வெவ்வேறு காலங்களில் தெரிவு செய்யப்படுவதைக் காணக்கூடியதாகவுள்ளது, ஜனாதிபதி தனது அதிகாரக் கதிரையில் அமர்ந்தபடி பாராளுமன்றத்துக்கான தேர்தல்களை நடத்துகின்றார். தனது கட்சியைச் சேர்ந்தவர்களையே பாராளுமன்றத்திற்கும் தெரிவு செய்யுமாறு இவர் நாட்டுமக்களை கேட்டுக்கொள்கின்றார்.. ஜனாதிபதியுடன் ஒத்துப்போய் ஏதாவது நன்மைகளைப் பெறவேண்டுமாயின் பாராளுமன்றத்திலும் அவரது கட்சிக்காரர்களே இருக்க வேண்டுமென்று எண்ணி மக்களும் ஜனாதிபதியின் கட்சிக்கே வாக்களிக்கின்றனர். மறு பக்கம் பாராளுமன்றம் உறுதியான அதிகாரத்துடன் இருக்கும்போது ஜனாதிபதித் தேர்தலை நடத்துகின்றனர், , அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிக்கும்படி வாக்காளரைக் கோருகின்றனர். பாராளுமன்றத்துடன் ஒத்துப்போகும் ஜனாதிபதி இருந்தால்தான் நாட்டில் ஸ்திரத்தன்மையும் அபிவிருத்தியும் ஏற்படுமென்று எண்ணி மக்களும் ஆளும் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கே வாக்களிக்கின்றனர். இன்றுவரை இந்த நடைமுறையை பின்பற்றிவருவதை நாம் அவதானிக்கலாம். இவ்வாறு ஒரே கட்சி தொடர்ந்தும் நீண்டகாலத்திற்கு ஆட்சியில் இருக்க முற்படும்போது ஜனநாயகத்தின் இருப்பு கேள்விகுறியாகுகின்றது, நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஆட்சி முறைமை நடைமுறையில் இருந்தால் நாட்டின் அரசியல் நிலைமை ஸ்திரமாக இருக்கும். சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை இலகுவாகத் தீர்த்து வைக்க முடியும் என்றெல்லாம் சிலர் வாதிடுகின்றனர். முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன 1978 இல் இருந்து 1988 வரையும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகவும் பாராளுமன்றத்தில் 4/5 பெரும்பான்மையைக் கொண்டவராகவும் ஆட்சி நடத்தியபோதும் என்னென்ன பிரச்சினைகளைத் தீர்த்துவைத்தார்? வேலையில்லாப் பிரச்சினை, பொருளாதாரப் பிரச்சினை எதையுமே தீர்த்து வைக்கவில்லை, 1983 ஜூலை இன படுகொலைகளை தடுத்து நிறுத்த முயற்சிக்காமல் ’தமிழ்மக்களுக்குயுத்தம் என்றால் யுத்தம் சமாதானம் என்றால் சமாதானம்’ என்று அறிக்கை விட்டு இனப்பிரச்சினையை மேலும் சிக்கலான கட்டத்திற்குத் தள்ளிவிட்டார். என்பதை எந்தத் தமிழ் மக்கள் மறந்து விட மாட்டார்கள்.இக்கலவரத்தினால் அதிகளவில் பாதிக்கப்பட்டவர்கள் மலையக தமிழர்களே என்பதையும் மறுப்பதற்கில்லை .முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸ வின் மறைவுக்கு பின் அதிர்ஷ்ட்டவசமாக ஜனாதிபதி பதவிக்கு வந்த டி.பி.விஜேதுங்க ”பெறும்பான்மை மக்கள் பெரும் விருட்சம்.அதில் சுற்றிபடரும் கொடிகளே சிறுபான்மை மக்கள்” எனும் சாணக்கியமற்ற அப்பட்டமான இனவாதப்பேச்சினால்,சிறுபான்மை மக்களும், ஜேவிபி யினரை கொடூரமாக அடக்கி சிங்கள இளைஞர்களை ஆயிரக்கணக்கில் கொன்றதால் சிங்கள மக்களும் ஐதேக அரசாங்கத்தில் அதிருப்தி கொண்டிருந்தனர், 1994 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் அராஜகத்தைக் கூண்டோடு அழிப்பதாகக் கூறித் தேர்தலில் நின்ற சந்திரிகா அம்மையார் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த வாக்குகளைப் பெற்று 62 சதவீத வாக்குகளுடன் வெற்றிவாகை சூடி ஜனாதிபதியானார். 62 சதவீத வாக்கு என்பது இதுவரையில் யாரும் பெறாத வாக்குகளாகும். இவரும் இனப்பிரச்சினையைத் தீர்த்து வைக்க எதுவும் செய்யாததோடு, ஆட்சிக்கு வந்த ஒருவரிடத்திலேயே யாழ். குடாநாட்டை முற்றுகையிட்டு மக்களை அகதிகளாக வெளியேற்றினார். இவ்வாறு தமிழ் மக்களின் வாக்குகளை அமோகமாகப் பெற்றுக்கொண்டு பின் அவர்கள் பக்கமே திரும்பி பார்க்காத கைங்கரியத்தையே ஜனாதிபதிகள் எப்போதும் செய்துவந்திருக்கின்றனர். 2005 ஆம் ஆண்டுத் தேர்தலில் வென்று ஜனாதிபதியாக வந்த மகிந்த ராஜபக்ஷ வும் சிறுபான்மை மக்களுக்கு எதனை கொடுத்தார் என்பதனை நாடே அறியும், விடுதலை புலிகளை போரில் வென்றதாக கூறி அந்த ரத்தம் காயும் முன்பே தன்பதவிகாலத்தை நீடித்துக்கொள்ள வழி தேடினார்.அதற்காக தான் போரில் வெற்றியடைய காரணமான தன் படைதளபதி சரத்பொன்சேகாவையே உள்ளே தள்ளியவர்.பொதுவாகவே எதிர்கட்சிகளிடமும்,மக்களிடமும் ஒரு போக்கு காணப்பட்டது.என்ன இரண்டு முறைதானே ஆள முடியும்,ஆட்டம் காட்டமுடியும் பிறகு வீட்டுக்கு போய்தானே ஆகவேண்டும்? எனும் எண்ணம் தான் அது.அனைவருக்கும் ஞாபகமிருக்ககூடும், முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன மரணித்தபோது தேசிய துக்க தினமாகவோ, அரசவிடுமுறையாகவோ,ஏன் அரச ஊடகங்களில் மரண ஊர்வலம் நேரடியாக காட்டக்கூடவோ இல்லை. ஷான் விக்ரமசிங்ஹவின் டி.என்.எல் மட்டுமே ஒளிபரப்பியது. ஆகவே இரண்டுமுறை ஆட்சி என்பதில் யாரும் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் வாய்புக்காக காத்திருந்தனர். ஆனால் மஹிந்த அதற்கும் வைத்தார் ஆப்பு.விடுதலை புலிகளை வெற்றிகொண்டதை தன் குடும்ப வெற்றியாக காட்டி அதன் மூலம் அரசியல் இலாபம் தேட முனைகிறார்.தானும் தன்னை சார்ந்தவர்களுமே தொடர்ந்து பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காகவே, இலங்கை அரசியலமைப்பின் 18ஆவது சீர்திருத்தத்தை மஹிந்த கொண்டுவந்தார், இலங்கை அரசியலமைப்பின் 18ஆவது சீர்திருத்தம் இலங்கையை ஆளும் மகிந்த இராசபக்சதலமையிலான அரசினால் முன்மொழியப்பட்ட ஒரு அரசியல் சீர்திருத்தமாகும். இந்தச் சீர்திருத்தம் மூலம் அரச அதிபரின் அதிகாரங்கள் மேலும் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசியல் சீர்திருத்தம் மூலம் அரச அதிபர் தேர்தலில் இரண்டு முறை மட்டுமே ஒருவர் போட்டியிடாலாம் என்ற நிலை நீக்கப்பட்டு ஒருவர் எத்தனை தடவையும் போட்டியிடும் அனுமதி வழங்கபடும். இதேவேளை சுயாதீன ஆணைக்குழுக்கள் இந்ந திருத்தம் மூலம் அரச அதிபரின் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றது. மேலும் தேர்தல் ஆணையாளரின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்படுவதுடன் அரச சொத்துக்களை தேரதல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் உரிமையையும் தேர்தல் ஆணையாளர் இழக்கின்றார். தேர்தல் காலங்களில் தனியார் ஊடங்கள் செயற்படுவதற்கான விசேட கட்டுப்பாட்டு முறையும் இந்த அரசியலமைப்பு சீர்திருத்தம் மூலம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க தன்னையும் தன் குடும்ப ஆட்சியையும் நிலைநிறுத்திக்கொள்ள கொண்டுவந்த ஓர் சட்டமாகும், தன் செல்வாக்கால் உயர்நீதிமன்றத்தை வளைத்துப்போடக்கூடிய மஹிந்த இந்த அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை நிறைவேற்ற பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவை பெற்றால் மட்டும் போதும் என்றும் பொது சன வாக்கெடுப்பு தேவையில்லை என்றும் உச்ச நீதிமன்றத்தை அறிவிக்க வைப்பதில் வெற்றிகண்டுள்ளார், மஹிந்தவுக்கு பின் ஜனாதிபதியாகும் கனவிலுள்ள கட்சிகாரர்களுக்கும், எதிர்கட்சிகாரர்களுக்கும் இது பெருத்த அடியாகும். மஹிந்தவுக்கு எதிராக கிளம்பியிருக்கும் கூட்டு இந்த அடிப்படையில் இணைந்த ஒன்றாகவே கருத வேண்டியுள்ளது எது எப்படியாயினும். மஹிந்தவும், பொதுவேட்பாளர் அணியும் வெற்றி பெற்றே ஆகவேண்டிய நிர்பந்தத்திலுள்ளார்கள் அதற்கான காரணம் தான் என்ன? மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதி இந்த தேர்தலில் வெற்றியடையந்தாலும்,தோல்வியடைந்தாலும் அது வரலாறுதான் இலங்கை அரசியல் வரலாற்றில் அது ஒரு முக்கிய பதிவாகவிருக்கும் ஏனெனில் ஆட்சியிலிருக்கும் எந்தவொரு ஜனாதிபதியும் இதுவரை தோல்வியடைந்ததில்லை ஆகவே மஹிந்த தோற்றால் ஆட்சியிலிருக்கும் ஒரு ஜனாதிபதி தோற்றார் என்றும் வெற்றிபெற்றால் மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாக வென்றார் எனவும் அரசியல் வரலாறு கூறும், அது ஒருபுரமிருக்க மஹிந்த ஏன் வெற்றியடைய வேண்டும் என நோக்கின் பின்வரும் காரணங்கள் தெரியவரும், நாட்டின் பெயரால், தன்னினத்தின் பெயரால் பயங்கரவாதத்தை ஒழிக்கின்றேன் என்ற ரீதியில் ஓர் இன சுத்திகரிப்பு செய்யப்பட்டுள்ளதாக சிறு பான்மையினர் நினைக்கின்றனர். அதனால் புலம் பெயர் அமைப்புகளிடமிருந்தும், ஐ.நா சபையிடமிருந்தும், மேற்குலகு நாடுகளிடமிருந்தும் அச்சுறுத்தல்களை எதிர் நோக்குவதாக கருதுகின்றார். இதனால் தான் ஆட்சியிலிருந்து அகற்றப்படுவோமாயின் தானும்,தன் குடும்பமும் பாதிக்கப்படுவோம் என்கின்ற பயம். ஜனாதிபதி என்கின்ற கவசம் இல்லாது போனால் மேற்குலக விசாரணைகளுக்கு முகம் கொடுக்க நேரலாம் எனும் அச்சம். பல்வேறு வகைகளில் ராஜபக்‌ஷவினர் கையகப்படுத்தியுள்ள சொத்துக்களின் இருப்பு கேள்வி குறியாகிவிடும் என்ற கலக்கம். பதவியும்,சொகுசும் பறி போய் சாதாரண மனிதனாகிவிடுவோம் என்கின்ற பயம்.அதைவிட அரசியலிலிருந்து தாம் முற்றாக துடைத்தெறியப்படுவோம் எனும் பீதி போன்றவை மஹிந்தவை என்ன பாடுபட்டாகிலும் வெற்றியடைய வேண்டும் எனும் நிர்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது, எதிரணி எனும் போது அதில் இடம்பெற்றுள்ள அரசியல் கட்சிகளை நாம் ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும். பிரதானமானது ரணிலின் ஐ.தே.க, அடுத்து சரத்பொன்சேகாவின் ஜனநாயக முன்னணி, அடுத்து ஜாதிக ஹெல உறுமய, உண்மையான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என கூறிக்கொள்ளும் சந்திரிக்கா பண்டாரநாயக்க, ஸ்ரீ.ல.சு வின் பொதுசெயலாளர் மைதிரிபால சிறிசேன, அரசிலிருந்துவெளியேறிய அமைச்சர்கள், பிரதியமைச்ச்ர்கள். தமிழ் கட்சிகளான மனோ கணேசன் தலைமையிலான ஐனநாயக மக்கள் முன்னணி, திகாம்பரத்தின் தொழிலாளர் தேசிய சங்கம், இராதாகிருஷ்ணனின் மலையக மக்கள் முன்னணி (அது இப்போது பிளவு பட்டிருக்கின்றது) இன்னும் சிற் சில சிறு கூட்டுகளோடு களமிறங்கியிருக்கும் எதிரணியினர் வெற்றிபெற வேண்டிய அவசியம் ஏன் எனும் காரணத்தை ஆராய்வோமானால் கீழ் வருவனவற்றைக் குறிப்பிடலாம், மூன்றாம் முறையாகவும் மஹிந்தவுக்கு வாய்ப்பளித்தால் அதன்பிறகு எதிர்கட்சிகள் என்பதே இல்லாது போய்விடும் ரணிலை பொறுத்த வரையில் தன்கட்சியினூடாக பிரதமராகவோ,ஜனாதிபதியாகவோ எவ்வகையிலும் வரமுடியாது போய்விடலாம், மேலும் தம்கட்சினுள் எழும் எதிர்ப்புகளை சந்திக்க முடியாது போகும் எனும் ஐயம். தன்னை அரசியல் பழிவாங்களுக்கு உட்படுத்தியவர்களை எவ்வகையிலும் பழிவாங்க இதனை பயன்படுத்திகொள்ள சந்தர்ப்பம் பார்க்கும் சரத்பொன்சேகா (மைதிரி அரசமைத்தால் தனக்கு பாதுகாப்பு அமைச்சு வேண்டும் என கோரியுள்ளதாக தகவல்) சந்திரிக்கா தன் மீள் அரசியல் பிரவேசத்தின் மூலம் கட்சியை கைபற்றிக்கொள்ளவும், எதிரிகளை வேட்டையாடவும் எண்ணுதல். மைதிரிபால சிறிசேனவுக்கு வெற்றியடைந்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தம்.காரணம் யாதெனில் மைதிரி தன் முதுகில் குத்தி தனக்கு துரோகம் இழைத்து விட்டதாக மஹிந்த கருதுகின்றார் அடித்தால் அடிப்பேன் எனும் கொள்கையை கொண்ட மஹிந்த மைதிரி மீது கொள்வார் என எதிர்பார்க்க முடியாது, மலையக கட்சிகளை பொறுத்தவரையில் பெரும்பாலும் தேசிய கட்சிகளின் போக்கிலேயே அரசியல் செய்து வந்திருக்கின்றன ஆகவே தம் இருப்புகளை பாதுகாத்துக்கொள்ள அவ்வப்போது தம் அணிகளை மாற்றிக்கொண்டு வந்திருக்கின்றன. சிறுபான்மை மக்கள் பெரும்பாலும் தேசிய அரசியல் தீர்மானங்களை தங்கள் உணர்வுப்படியும், மற்ற தேர்தல்களை கட்சிரீதியாகவும்,புறகாரணிகளின் அடிப்படையிலும் தீர்மானிக்கின்றார்கள் என்பதை இங்கே கவனிக்க வேண்டும், ஆகவே இந்த ஜனாதிபதி தேர்தலில் ஒவொரு தரப்பும் வெற்றிபெற வேண்டியதின் அவசியம் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகின்றது என்பது விளங்கும், ஆனால் மலையக மக்கள் எத்தரப்பினரை ஆதரிக்க வேண்டும் என்பதை தேர்தலில் போட்டியிடும் தரப்பினரை சார்ந்திருக்கின்ற அரசியல் வாதிகள் கூறிகொண்டிருந்தாலும் மலையக மக்கள் ஒருமுறைக்கு இருமுறை சீர்தூக்கி பார்த்தே வாக்களிக்கவேண்டும் ஏனெனில் நிறங்களும்,அணிகளும் மாறிகொண்டிருக்கின்றன்வே தவிர கொள்கைகளில் பெரிய மாற்றங்களை அவதானிக்க முடியவில்லை. நுவரெலியா மாவட்டத்தில் தெரிவான மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாம் அரசாங்கத்தில் இருந்து விலகியமைக்கு முரண்பாடான காரணங்களை வெளியிட்டுள்ளதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க, தமிழ் பெருந்தோட்ட புறங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்படுவதாகவும் சிங்கள கிராமங்களுக்கு அந்த ஒதுக்கீடுகள் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். எனினும் எதிர்க்கட்சியில் இணைந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான திகாம்பரமும், ராதாகிருஸ்ணனும் பெருந்தோட்டப் புறங்களுக்கு உரிய நிதியொதுக்கீடுகள் இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர். எனவே ஆளும் கட்சியில் இணைந்திருந்து விலகி எதிரணியில் சேர்ந்த இவர்கள் மூவரின் கருத்துக்களிலும் முரண்பாடுகள் உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆகவே யார் சொல்வதை மலையக மக்கள் ஏற்பர். இரண்டு அணிகளுமே இனவாத கூட்டுதான். சிறுபான்மையினரை மையபடுத்தி அவர்களின் இருப்புகள் தொடர்பாக தான் இரு அணிகளுமே தமது பிரச்சாரத்தினை முன்னெடுக்கின்றன. வடகிழக்கை மீண்டும் இணைப்பதற்கு தமிழர்விடுதலை கூட்டணியும் எதிரணியினரும் திரைமறைவில் ஒப்பந்தம் செய்திருப்பதாக மஹிந்த கூறுகிறார். சந்திரிக்கா ஜனாதிபதியாகவிருந்த காலத்தில் தனது அரைவேக்காட்டு தீர்வுபொதியை முன்வைத்த நீதி அரசியல் அமைப்பு அமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ஜீ.எல்.பீரிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாடு என்ன என தெளிவுபடுத்த வேண்டும் 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி முழு அளவில் வடக்கு மாகாணசபைக்கு காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்குவாரா இல்லையா என்பதனை தெளிவாக அறிவிக்க வேண்டும். மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜாதிக ஹெல உறுமய ஆகியவற்றுடன் செய்து கொண்டுள்ள இரகசிய உடன்படிக்கை பற்றிய தகவல்களை அம்பலப்படுத்த வேண்டும். வட மாகாணசபைக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது குறித்து அரசாங்கம் தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. எதிர்வரும் காலங்களிலும் அதேவிதமாக சட்டங்கள் அமுல்படுத்தப்டும். மாகாணசபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்குவது பொருத்தமாகாது. இதுவே அரசாங்கத்தின் நிலைப்பாடாக அமைந்துள்ளது. மாகாணசபைகளுக்கு காணி பொலிஸ் அதிகாரங்கள் பொருத்தமற்றது என அரசாங்கம் அறிவித்த நிலையிலேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டியது என அவர் தெரிவித்துள்ளார் பொதுபல சேனா போன்ற அமைப்புகளினால் சிறுபான்மை இனத்துக்கு பாரிய அச்சுறுத்தல்கள் காணப்படுகின்றன, அரசதிணைக்களங்களில் தமிழ் மொழி புறகணிக்கபடுகின்றன, மலையக மக்களின் வீட்டுரிமைகள் மறுக்கப்படுகின்றன, மலையக மக்களின் வாழ்வாதார உரிமைகளுக்காகவே இன்னமும் போராட வேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது. சிறுபான்மையினர் அதிகளவு இழந்தது இந்த ஆட்சியாளர்களின் காலத்தில்தான் என்றால் அதில் தவறு இருக்க முடியாது என்பதே என் கருத்து. அதேநேரத்தில் பொது வேட்பாளர் அணியை உற்றுநோக்கினால் கீழ்வரும் கருத்துக்கள் தவிர்க்க முடியாதவை. 75% போரை தானே நிறைவு செய்தேன் என சந்திரிக்காவும், போரை நிறைவு செய்தது யார் என்பதை மக்களும் ராணுவத்தினரும் அறிவர் என சரத்பொன்சேகாவும் கூறுகின்றனர், அவர்களையும் உள்ளடக்கி இராஜதந்திர ரீதியாக தமிழர் போராட்டத்தை நசுக்குவதற்கு மூலோபாயம் வகுத்து கருணாவை பிரிக்க காரணமாகவிருந்த ரணில் இனவாதத்தையும் மதவாதத்தையும் கக்கும் ஜாதிக ஹெல உறுமய தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர்களின் தீர்வு தொடர்பாக எதனையும் கூறாத அதேநேரம் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்காமல் 18ஆம் திருத்தசட்டத்தை மட்டும் ஒழிக்க விருப்பதாக கூறும் மைதிரிபால சிறிசேன இவர்களின் கூட்டு மலையக மக்களுக்கு எதனை வாரிவழங்கிவிடப்போகின்றது?. காலத்துக்குகாலம் ஆட்சி செய்த அரசாங்கத்துடன் இணைந்துக்கொண்டு பதவிகளையும் பெற்றுக்கொண்ட மலையக தலைமைகள் இதுவரை காலம் சாதித்தவைதான் என்ன? மலையகத்துக்கு இவர்கள் எதனையுமே செய்யவில்லை எனநாம் கூறவில்லை ஆனால் அவர்கள் அரசியலில் ஈடுபட்டிருந்த காலமும் பதவிகளிலிருந்த காலங்களையும் கருத்தில் கொண்டால் எவ்வளவோ சாதித்திருக்கலாம் ஆனால் நாம் இன்னமும் அடிப்படை உரிமைகளுக்காக அல்லாடிக்கொண்டிருக்கிறோம்.ஆசிரியர்களாக,கிராமசேவகர்களாக,சமுர்தி உத்தியோகத்தர்களாக தொழில் பெற்றுக்கொடுத்திருக்கிறோம் என்று பெருமைபட்டுக்கொள்வதில் எவ்வித பயனுமில்லை.இதை தவிர வேறு திணைக்களங்கள் அரசாங்கத்தில் இல்லையா? அல்லது மலையக இளைஞர்களுக்கென்று தொழில் வாய்ப்புகள் வரையறுக்க பட்டுள்ளனவா என்ற கேள்வி எழாமலில்லை, ஆனால் மலையக மக்கள் ஏதோவொரு வகையில் எந்த கட்சிக்காவது வாக்களிக்கத்தான் வேண்டும். நமக்கு சலுகைகள் தேவையில்லை.உரிமைகளே தேவை.அந்த வகையில் நாம் ஓரளவாவது உரிமைகள் கிடக்கும் என கருதும் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். பெரும்பாலானவர்கள் பொதுவேட்பாளருக்கு வாக்களிக்கலாம் என எண்ணியிருக்கின்ற வேளையில் தேர்தல் முடிவுகள் ஒரு இரானுவ நகர்வுக்கு இட்டுசெல்லலாம் எனவும் கருத இடமுண்டு சிறுபான்மை இனத்தவர்களின் உரிமைகளை நிலைநாட்டிக்கொள்ள இத்தேர்தலை பயன்படுத்த முடியாவிட்டாலும் நம் மன உணர்வுகளை வெளிக்காட்ட முடியும். இதன்போது அடுத்து வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் தவிர்க்க முடியாத பங்குதாரர்களாக இருக்கமுடியும். சின்னையா இரவிந்திரன் செயலாளர் புதிய மலையகம்
comments | | Read More...

V.S வேலு என்பவரை தெரியுமா?

Penulis : Unknown on சனி, 18 அக்டோபர், 2014 | சனி, அக்டோபர் 18, 2014

சனி, 18 அக்டோபர், 2014

மல்லிகை மலர் தூவி வாழ்த்த நினைத்திருந்தேன்... எள்ளு பொரி தூவி இறைக்க நாள் வந்ததுவோ...? அல்லி விழி மூடி, அமுத இதழ் மூடி, வெள்ளை துகில் மூடி, மேனியிலே மலர் மூடி , சொல்லாது நீ போகும் நாள் வந்ததுவோ...! என கதறி 1986.07.19 தனது மூத்த மகள் மணிமேகலை அகால மரணமடைந்த பொழுது சிந்தாமணியில் இவர் எழுதிய கண்ணீர் அஞ்சலி தான் இது. ] அவர்... மலையக கவிஞர் ”குறிஞ்சி தென்னவன்” கவிஞர் குறிஞ்சி தென்னவனின் இயற்பெயர், V.S வேலு இவர் சுப்பையா, முருகம்மா தம்பதியினருக்கு நோர்வூட் தெம்மதுரை தோட்டத்தில் 1934.03.12 ஆந்திகதி பிறந்தார். பின் இவரின் பெற்றோர் நுவரெலியாவுக்கு அண்மையிலுள்ள லபுக்கலை தோட்டம் மேற்பிரிவுக்கு குடிபெயர்ந்தனர். லபுக்கலை தோட்ட பாடசாலையில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கல்விகற்றார். வறுமை நோயின் தாக்கத்தால் தொடர்ந்தும் கல்விகற்க முடியாமல் தனது 11 ஆவது வயதில் தோட்டதில் தொழிலாளியாக பெயர் பதிந்துக்கொண்டார்.வாசிப்பின் மீது அதீத காதல் கொண்டபடியால் தனது பள்ளிபாடம் நின்று போனாலும் எப்படியாவது தமிழகத்து சஞ்சிகைகளையும்,ஈழத்து சஞ்சிகைகளையும்,கிடைக்கின்ற நூல்களையும் புராணங்களையும் வாசித்து தனது தமிழாற்றலை வளர்த்துக்கொண்டிருக்கிறார். பின்னர் தனது 18 ஆவது வயதில் தனது கன்னி கவிதைகளை எழுத தொடங்கினார். தனது கவிதாஆற்றலை பரீட்சித்துப்பார்த்தார் என்றே சொல்லலாம்.பின் 1960க்குப்பின் தான் தன்னை ஒரு கவிஞனாக அடையாளப்படுத்த தொடங்கினார் என்பதே பொருத்தமாகவிருக்கும். இவர் தோட்டதொழிலாளியாக இருந்தப்படியால் சக தொழிலாளர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளகூடியவராக இருந்தார். ஏறக்குறைய 4500 க்கும் மேற்பட்ட கவிதைகள் 1000க்கும் மேற்பட்ட குரும்பாக்கள் என்பவற்றை எழுதியுள்ளார். பத்திரிக்கைகள், சஞ்சிகைகள் என்பவற்றில் வெளிவந்த இவரது கவிதைகளில் பெருபாலும் தான் வாழ்ந்த சூழல்களையும் தொழிலாள சோகங்களையும் பதிந்திருக்கிறார். ஆயிரக்கணக்கான கவிதைகளை இவர் எழுதியிருந்தப்போதும் சிலகவிதைகளே நூலுருவம் பெற்றிருக்கின்றன. 1987ல் குறிஞ்சி தென்னவன் கவிதைகள் என்ற நூல் வெளிவந்தது. பின்பு அதே நூல் அவர் எழுதிய சில குறுப்பாக்களையும் இணைத்துக்கொண்டு மீண்டும் வெளிவந்தது. 2007ம் ஆண்டில் சாரல் நாடான் அவர்கள் தொகுப்பில் ”குறிஞ்சி தென்னவன் கவிதைகள்” அவரது இன்னும் சில கவிதைகளை தாங்கி வெளிவந்தது. இவரது கவித்துவத்துக்கு மலையகத்தில் அங்கீகாரம் இல்லாமல் இருக்கவில்லை. எனவே இவர் பல விருதுகளையும் பெற்றிருக்கிறார். அதில் குறிப்பாக 1996 ஆம் ஆண்டு இந்துகலாசார அமைச்சினால் கிடைத்த ”கலாபூஷணம்” விருதைக்குறிப்பிடலாம். அதற்கு அடுத்த ஆண்டே 1997ல் புற்று நோயின்காரணமாக நுவரெலியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 1998.01.19 ஆந்திகதி சிகிற்சை பலனின்றி இயற்கை எய்தினார். சரஸ்வதியின் அருள் இருந்தளவுக்கு லஷ்மியின் அருள் கிட்டவிலை என்றே கூறவேண்டும். கடைசிவரை வறுமைநோயை அவரால் எதிர்த்து போராட முடியவில்லை. இடது சாரி கொள்கையில் பிடிப்பு கொண்ட கவிஞரால் எவரிடமும் கையேந்த மனம் வரவில்லை. எனவே அவரது கவிதைகளால் அவரைவிட வேறுசிலரே பயனடைந்தனர். இவரை தனது நண்பர் என கொண்டாடும் சிலர் கவிஞரின் மரணத்தில் கூட கலந்துக்கொள்ளவில்லை என்பது தான் வேதனை. கவிஞரின் மனைவி லச்சுமி,மகன் கார்திகை பாலன்,மகள் மார் தாமரைச்செல்வி,ஞானபிரியா ஆகியோர் இன்னமும் வாழ்க்கை போராட்டத்திலிருந்து மீள முடியவில்லை. இவரின் மகன் கார்த்திகை பாலன் நுவரெலியாவில் ஒரு புத்தகக்கடையில் ஊழியராக தொழில் புரிகிறார். 1996 ஆம் ஆண்டு எனது தாயார் மரணித்தப்பொழுது தனது உடம்பில் நோயின் வேதனை வாட்டிய போதும் அதனை வெளிக்காட்டாது காரியங்கள் முடியும் வரை என்னுடன் ஆறுதலாக இருந்தார். இளவல் இரவிந்திரன் என்னும் தலைப்பில் அவர் எனது தாயாருக்காக எழுதி தந்த இரங்கற்பா துரதிர்ஷ்டவசமாக எங்கோ தொலைந்து போனது மிகவும் வேதனையாகும். காலத்தால் மறக்க கூடாத கவிஞர் குறிஞ்சி தென்னவனின் ஆயிரக்கணக்கான கவிதைகள் இன்னும் அச்சிவாகனத்தில் ஏறாமல் இருக்கின்றன. எவராவது அதற்க்காக உதவ முன்வருவார்களாயின் மலையக இலக்கிய சமூகத்துக்கும் கவிஞருக்கும் ஆற்றும் மிகப்பெரிய சேவையாகும். S.இரவிந்திரன்
comments (2) | | Read More...

Malaiyaga arasiyal மலையக அரசியல்

Penulis : Unknown on வெள்ளி, 19 செப்டம்பர், 2014 | வெள்ளி, செப்டம்பர் 19, 2014

வெள்ளி, 19 செப்டம்பர், 2014

comments | | Read More...

உரிமைகளா?சலுகைகளா ?

Penulis : Unknown on வியாழன், 7 ஆகஸ்ட், 2014 | வியாழன், ஆகஸ்ட் 07, 2014

வியாழன், 7 ஆகஸ்ட், 2014

இலங்கையில் 10578000 பேர் உழைப்பாளர்கள்; அவர்களில்அரச துறையில் உள்ளோர்15.5வீதம் தனியார்துறை 42.1வீதம் சுயதொழிலில் ஈடுபடுவோர் 29 வீதம் இதில் வேளாண்மைத் துறையில் 2476000 பேர் உழைப்பில் ஈடுப்பட்டுள்ளனர். இதில் 460000 பேர் தேயிலை றப்பர் பெருந்தோட்டத் துறைத் தொழிலாளர்கள் ஆவார்கள்.
hatton_435_01இவர்களில் அரசாங்க ஊழியர்களக்கான உரிமைகளை வென்றெடுப்பதற்கான தொழிற்சங்கங்கள் பல காணப்படுகின்றன ஒவ்வொரு வருடமும் வரவு செலவு திட்டங்களின் போது இவர்களின் சம்பள உயர்வு பிரதானசெய்தியாக காணப்படுகின்றது இது தவிர இலங்கையின் தாதிமார் சேவையும் சுகாதார சேவையும் தங்களின் தொழிற்சங்க போராட்டங்களின் மூலம் பல உரிமைகளை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. துறைமுகத் தொழிலாளர்களின் தொழிற்சங்கம் பிரபல அசைவுகளை ஏற்படுத்தக் கூடிய தொழிற்சங்கமாக இன்றும் காணப்படுகின்றது.இவற்றோடு ஒப்பிடும் போது மலையகத் தொழிற்சங்கங்களின் நிலைப்பாடு சற்று வித்தியாசமானதாகும்.காலனித்துவகாலம் தொட்டு இன்று வரை ஸ்தாபனப் படுத்தப் பட்டிருக்கும் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் இன்று ஸ்தாபனப் பலத்தினை இழந்து தொய்வடைந்து குரல் இழந்துக்காணப்படுவதனை அவதானிக்கக் கூடியதாய் உள்ளது. இதற்கானப் பின் புலம் கட்டாயமாக அவதானிக்கப் பட வேண்டிய விடயமாகும். மலையகத்தினைப் பொருத்தவரை இங்குள்ள பலஆயிரம் தொழிற்சங்கங்கள் குறிப்பிட்ட சிலத் தலைவர்களின் ஆதிக்கத்திற்கு கீழாக அல்லது ஒரே ஒரு தலைவனின் முழு ஆதிக்கத்தின் கீழ் காணப்படும் தொழிற்சங்கங்களாக காணக்கூடியதாக இருக்கின்றது. இன்றைய நுகர்வுக் கலாச்சாரமும் தொழிலாளர் பாதுகாப்பும் சற்று விமர்சனநோக்கோடு ஆய்விற்குட்படுத்தும் போது இந்திய சினிமாக்களின் கதாநாயகனின் பலம் எவ்வாறு மிகைப்படுத்தி சித்தரிக்கப் படுகின்றதோ அதற்கு சலைக்காமல் தொழிற்சங்கத் தலைமைகளின் கதாநாயகத்தனத்தினை மிகைப்படுத்தி காட்டும் மிகவும் துரதிஸ்ட நிலைமையினைக் காணக் கூடியதாக உள்ளது.
இவ்வாறான தொழிற்சங்க கட்டமைப்பானது தொழிற்சங்க தோற்றத்தின் நோக்கங்களுக்கு முரணானது என்பதனை தொழிலாளர்கள் சிந்திக்க தவறியது தொழிற்சங்கங்கள் இன்று தேவையற்றது என்று காட்டுவதற்கு முயற்சிப்போரின் கருத்துக்களை பலப்படுத்துவதாக காணப்படுகின்றது.பெருந்தோட்டங்கள் யாவும்நீண்ட கால குத்தகைக்காக 23 கம்பனிகளிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளனஅவற்றில் கூடியபங்கினை இந்திய கம்பனிகள் வாங்கியிருப்பதுடன் இலங்கை பல வருடகாலமாக தக்கவைத்து வந்த நற்பெயரை தேயிலை வர்த்தகத்தில் இல்லாது செய்த பெருமை இந்த இந்திய கம்பனிகளின் சாதனையாகும்;. இன்று இலங்கையின் தரமானதும் சுவையானதுமான தேயிலை இந்திய உற்பத்தியாகவே சந்தைப் படுத்தப் படுகின்றது.
முலையகத் தொழிற்சங்கங்கள் இவை தொடர்பாக எவ்வாறான நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளன என்பதனைத் தெளிவுப்படுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும் .ஏனெனில் இந்த நிலைமை இலங்கையின் தேயிலை உற்பத்தியினை மரணபாதாளத்திற்கு இட்டுச் செல்வதனை அவதானிக்க கூடியதாய் உள்ளது.மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் இனரீதியான ஒடுக்குமுறையுடன் கடுமையான உழைப்புச்சுரண்டலையும் உரிமையற்ற உடைமைகளைக் கொண்ட நவீன அடிமைகளாககாணப்படுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது தொழிற்சங்கங்களின் கடமை தொழிலாளர்களின் உரிமைகளை பெற்றுக் கொடுப்பதுடன் தொழிலாளரின் இருப்பினை பாதுகாப்பதுவும் ஆகும் இன்னும் வீடற்றவர்களாகவும் நாடற்றவர்களாகவும் விலாசமற்றவர்களாகவும் வாழ நேர்ந்திருப்பது மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் மாத்திரமே. இந்நிலைப்பாடு தொழிற்சங்கங்களின் பொதுவான கடமை நிறைவேற்றப்படவில்லை என்று குற்றம் கூற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது.ஆனாலும்
தொழிற்சங்கங்களுடாகவே மலையகப் பிரதேசம் அபிவிருத்தி அடைகின்றது என்னும் கருத்து இன்னும் தொடர்ந்தவண்ணமே உள்ளது வேளான்மைத்துறையில் 2476000பேர் உழைப்பில் ஈடுப்பட்டுள்ளனர் இதில் 460000 பேர் தேயிலை றப்பர் பெருந்தோட்டத் துறைத் தொழிலாளர்கள் போக மிகுதி இருக்கும் 2016000 பேரான தமிழ் சிங்கள இஸ்லாமிய விவசாயிகள் வாழும் பிரதேசங்கள் எதுவும் அபிவிருத்தி அடையவல்லையா? என்னும் கேள்வி கேட்கப் பட வேண்டிய கேள்வியாகும். தேயிலை றப்பர் பெருந்தோட்டத் துறை 460000 பேருக்கு பல ஆயிரம் தொழிற்சங்கங்கள் இருந்தும் இந்த தொழிற்சங்க தலைமைகள் முழு நேர அரசியல் வாதிகளாக இருந்தும் ஆட்சியமைக்கும் எல்லா அரசாங்கங்களுடனும் பங்குதாரர்களாக இருந்தும் கிட்டாத அபிவருத்தி ஏனைய பிரதேசங்களுக்கு மிகையாக கிட்டியிருப்பதனை நோக்கும் போது உரிமைகளும் இன்றி அபிவிருத்தியும் மந்த கதியில் பெற்ற மலையக மக்கள் நாவலப்பிட்டிக்கும் அட்டனுக்குமான வித்தியாசத்தினை கண்முன் நிறுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும்.சலுகைகளிலே மிக உயர்ந்த சலுகை வீட்டு வசதியாகும் இந்த சலுகையினை பூரணமாகப் பெற்று கொடுத்தால் ஏனைய சலுகைகள் இயல்பாக வந்து சேரும் இதைவிட அடிப்படை உரிமைகள் மனிதனுக்கக் கிட்டுமானால் அவனுக்கு சலுகைகள் தேவைப்படாது.
இலங்கைநாட்டின் ஏனைய பிரதேசங்களின் சாதாரண சனசமூக நிலையங்களும் கிராம அபிவிருத்தி சபைகளும் மரண உதவி அமைப்புகளும் சர்வ சாதாரணமாக பெற்றுக் கொடுக்கும் சலுகைகளை பெற்றுக் கொடுப்பதற்காக நமது தொழிற்சங்கங்களின் வளங்கள் விரயப்படத்தப் படுவது விமர்சனத்துக்குட்படுத்த வேண்டிய விடயமாகும். எனவே மக்களின் சக்தியால் வளர்க்கப் படும் வளர்க்கப் பட்ட தொழிற்சங்கங்கள் மக்களின் வளர்ச்சியினை அடிப்படையாகக் கொண்டதாய் இயங்க வேண்டியது இன்றைய மலையக மக்களின் கட்டாய தேவையாகும்.
comments | | Read More...

Penulis : Unknown on வியாழன், 13 மார்ச், 2014 | வியாழன், மார்ச் 13, 2014

வியாழன், 13 மார்ச், 2014

தேயிலையில் புற்றுநோயைக் குணப்படுத்தும் மருத்துவ குணம்

தேயிலையில் புற்று நோயைக் குணப்படுத்தும் விசேட மருத்துவ குணம் இருப்பதாக இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் பணிப்பாளர் அனில் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
தேயிலையில் இருக்கும் கெடேச்சன் என்ற இரசாயனம் புற்றுநோயின் வளர்ச்சியை தடுக்கும் மருத்துவ குணத்தை கொண்டிருப்பதாக கொழும்பு நாலந்த கல்லூரியில் மாணவரான ரகித்த மலேவன என்ற மாணவர் முதலில் கண்டறிந்துள்ளார்.
இதனையடுத்து அது குறித்து மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் அதனை ஆய்வு செய்து மாணவரின் கண்டுப்பிடிப்பை உறுதிப்படுத்தியது எனவும் அவர் கூறினார்.
தேயிலையில் இருக்கும் கெட்டச்சன் இரசாயனத்தை பிரித்து எடுத்து அதனை புற்றுநோய் செல்களில் செலுத்தப்பட்ட போது அது அழிந்ததை காணமுடிந்தது.
இதனால் குறித்த இரசாயனத்தை பயன்படுத்தி புற்றுநோய் செல்களை அழிக்கும் மருந்தை தயாரிக்க முடியும்.
இந்த இரசாயனத்தை கண்டுப் பிடித்த மாணவருக்கு இலங்கையின் சிறந்த ஆய்வுக்கான பரிசு வழங்கப்பட்டுள்ளதுடன், ஆய்வு பணிகளுக்காக அமெரிக்காவுக்கு செல்ல அவருக்கு புலமைப் பரிசில் கிடைத்துள்ளதாக அனில் சமரநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
comments | | Read More...

Penulis : Unknown on வெள்ளி, 7 மார்ச், 2014 | வெள்ளி, மார்ச் 07, 2014

வெள்ளி, 7 மார்ச், 2014

சர்வ தேச மகளிர் தினம் (08.03.2014)

1789ம் ஆண்டு பிரஞ்ச் புரட்சி நடந்தபோது பெண்களும் போராட்ட களத்தில் இறங்கினர். சமத்துவ உரிமைகள் வேண்டும் என்றும் எட்டு மணி நேர  வேலை, வேலைக்கு ஏற்ற ஊதியம், பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் அடிமைகளாக நடத்தக் கூடாது என்றெல்லாம் கோரிக்கைகளை முன்வைத்து  போராடினர். அதை நசுக்க நினைத்த மன்னர் லூயிஸ் பிலீப், போராட்டத்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் போராட்ட காரர்களை சமாதான  படுத்திப் பார்த்தான். ஆனால் முடியவில்லை. இதனால் தன் மன்னர் பதவியை துறந்தான். அதன் வெற்றி ஐரோப்பா முழுக்க பெண்கள் போராட்டம் நடத்த உத்வேகம் ஊட்டியது. ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் ஆகிய நாடுகளை சேர்ந்த  பெண்களின் தொடர் போராட்டங்களைக் கண்டு அரசு ஆடிப்போனது. இத்தாலிய பெண்கள், வாக்குரிமை கேட்டு போராடினர். பிரான்ஸில் பிரஷ்யனில்  இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங் பெண்களை அரசவை ஆலோசனை குழுக்களில் சேர்க்கவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும்  ஒப்புக்கொண்ட அந்த நாள் 1848 மார்ச் 8. அந்தநாளைத்தான் உலகம் முழுக்க பெண்கள் உரிமை தினமாக கொண்டாடுகின்றனர். பெண்களின் போராட்டம் அமெரிக்காவிலும் நடைபெ

ற்றது. 1908ம் ஆண்டு வாக்குரிமை கேட்டு பெண்கள் நடத்திய போராட்டத்தை கண்டு அமெரிக்க  ஜனாதிபதி பியோடர் ரூஸ்ரெல்ட்டே அஞ்சினார். 1910ம், ஆண்டு  ஓப்பன் ஹேகனில் கிளாரா ஜெட்கின் தலைமையில் அனைத்துலக பெண்கள்  மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் சர்வதேச மாதர் அமைப்பு உருவானது. இந்த அமைப்பின் சார்பாக 1911ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி  டென்மார்க் ஆஸ்திரியா ஜெர்மனி இன்னும் சில ஐரோப்பிய நாடுகளின் பெண் பிரதிநிதிகள் முதலாவது சர்வதேச மாதர் தினத்தைக் கொண்டாடினர். இந்த கொண்டாட்டத்தின் போதுதான் மார்ச் 8ம் தேதியை சர்வதேச மாதர் தினமாக கொண்டாட வேண்டுமென்பது முடிவு செய்யப்பட்டது. சமீபகாலமாக  ஐ.நா.சபையின் பெண்கள் அமைப்பு சார்பில், மார்ச் 8ம் தேதியை சர்வதேச மாதர் தினமாக உலகெங்கும் கடைபிடிக்கின்றனர். சுமார் 226  ஆண்டுகளுக்கும் மேலாக பெண்கள் போராடிப்போராடி தங்கள் உரிமைகளை பெற்றுவருகின்றனர். ஆனால் இலங்கை தேசத்தின் முதுகெலும்பாய், பொருளாதாரத்தின் தூணாய் இருக்கும் நம் பெண்களின் நிலை.........? இவர்கள் முழு உரிமை பெற இன்னும் எத்தனை காலம் போராட வேண்டும் என்பது புரிய வில்லை.
comments | | Read More...